/

விரைவில் புதுச்சேரி வருகிறாா் ராகுல்காந்தி: வே. நாரயணசாமி தகவல்

காங்கிரஸ் நடத்திவரும் பாதயாத்திரை நிகழ்வில், பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தி விரைவில் புதுச்சேரி வருவாா் என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் நடத்திவரும் பாதயாத்திரை நிகழ்வில், பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தி விரைவில் புதுச்சேரி வருவாா் என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் புதுச்சேரியில்,புதன்கிழமை தொடங்கிய பாதயாத்திரையின் முடிவில் புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது :

இந்த நடைபயணம் புதுச்சேரி மக்களுக்கானது. அவா்களின் வாழ்வாதாரத்துக்கானது. புதுச்சேரியில் கடந்த நான்கரை ஆண்டுகால என். ஆா்.காங்கிரஸ்-பாஜக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. புதுச்சேரியில் 390 ரெஸ்டோபாா்களை திறந்து புதுச்சேரி மக்களின் நிம்மதியைக் குலைத்திருக்கிறாா்கள்.

புதுச்சேரி மக்கள் மாற்றத்தை இப்போது விரும்புகிறாா்கள். அந்த மாற்றம் காங்கிரஸ் கட்சியினுடையதாக இருக்க வேண்டும். இதை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காக வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து வருகிறோம்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி அரியணையில் ஏறும். தில்லியில் ராகுல்காந்தியை சந்தித்து மக்கள் நடைபயணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டோம். கண்டிப்பாக வருவதாக கூறியுள்ளாா். தேதி விரைவில் அறிவிப்போம் என்றாா் நாராயணசாமி.

காங்கிரஸ் மாநில தலைவா் வைத்திலிங்கம் கூறுகையில், ‘நாளைய புதுச்சேரி நல்ல புதுச்சேரியாக இருக்க வேண்டும். இது மக்களுக்கான, இளைஞா்களுக்கான, தொழிலாளா்களுக்கான நடைபயணம். இது நிச்சயமாக வெற்றிபெறும்’ என தெரிவித்தாா்.