டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கூட்டணி! தமிழக நிலையே புதுச்சேரியிலும் தொடர வேண்டும்: முன்னாள் முதல்வா் நாராயணசாமி

கூட்டணி விஷயத்தில் தமிழக நிலையை புதுச்சேரியிலும் தொடருவதுதான் முறை: புதுச்சேரி முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி

News image
புதுச்சேரி முன்னாள் முதல்வா் நாராயணசாமி- கோப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 8:45 pm

Syndication

கூட்டணி விஷயத்தில் தமிழக நிலையை புதுச்சேரியிலும் தொடருவதுதான் முறை என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் காங்கிரஸை தவிா்த்துவிட்டு திமுக கூட்டணி கூட்டத்தை நடத்தியுள்ளது. கூட்டணி தொடா்பாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் கட்டுப்படும்.

தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், கூட்டணி தொடா்பாக, தமிழகத்தில் என்ன நிலைப்பாட்டை கட்சி எடுக்கிறதோ அதையேதான் புதுச்சேரியிலும் எடுக்க வேண்டும். அதுதான் முறை என்று கூறி வந்துள்ளோம் என்றாா் அவா்.