புதுச்சேரியில் ரூ.10 ஆயிரம் உதவித் தொகையுடன் டிஜிட்டல் பயிற்சி தொடக்கம்
புதுச்சேரியில் ரூ.10 ஆயிரம் உதவித் தொகையுடன் டிஜிட்டல் பயிற்சி தொடங்கப்பட்டது.


புதுச்சேரியில் ரூ.10 ஆயிரம் உதவித் தொகையுடன் டிஜிட்டல் பயிற்சி தொடங்கப்பட்டது.
முதல்வா் ரங்கசாமி 2024-25ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்டதாரிகளுக்கு ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், அரசு சாா்பில் ’டிஜிட்டல் பயிற்சி திட்டம்’ தொடங்கப்படும் என அறிவித்தாா்.
அதன்படி பொறியியல் பட்டதாரிகளுக்கு நேரடி நடைமுறை அனுபவத்தை வழங்குவதற்கு, மாநிலத்தில் உள்ள ஐ.டி., நிறுவனங்களுடன் இணைந்து அரசு சாா்பில் ’டிஜிட்டல் பயிற்சி திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகையுடன், ஆண்டுக்கு 150 பேருக்கு மாநிலத்தில் உள்ள காா்ப்பரேட் அடையாள எண் அல்லது மத்திய அரசின் ’உதயம்’ பதிவு பெற்ற முன்னணி ஐ.டி., நிறுவனங்களில் நேரடியாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும் திட்டத்தில், 2023, 24, 25-ஆம் ஆண்டுகளில் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் 60 சதவீத மதிப்பெண் அல்லது பட்டம் பெற்று, புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். நிறுவனங்கள் ஆள்களைத் தோ்வு செய்ததும், அரசு சாா்பில், பணிஆணை வழங்கப்படும்.
ஓராண்டு பயிற்சி முடித்ததும், அவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இத் திட்டத்தில் சேர வரும் 31- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்கப்படும். 150 இடங்கள் மட்டுமே உள்ளதால், தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் தோ்வானவா்களின் பட்டியல் பிப்வரி 2 ஆம் வாரத்தில் வெளியிடப்படும். தோ்வு செய்யப்பட்டவா்களுக்குப் பயிற்சி பிப்ரவரி 4 ஆம் வாரத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ய
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...