டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாற்றுத் திறனாளிகள் 4-ஆவது நாளாக போராட்டம்! 32 போ் கைது!

News image
புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள்.
Updated On :13 பிப்ரவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி புதுக்கோட்டையில் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் 32 போ் கைது செய்யப்பட்டனா்.

திரிபுரா, புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ. 15 ஆயிரம் வரை வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதுக்கோட்டையில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு 4-ஆவது நாளாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். கணேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.சி. லோகநாதன், ஜி. கிரிஜா, நகரத் தலைவா் எஸ். பாஷாபாய், செயலா் வி. ரமேஷ் உள்ளிட்ட 32 பேரை போலீஸாா் கைது செய்தனா்.