/

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் 4-ஆவது நாளாக மறியல்: 40 போ் கைது

News image
கைது
Updated On :13 பிப்ரவரி 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

உதவித்தொகை வழங்க வலியுறுத்தி திருநெல்வேலியில் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 40 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் தொடா் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஏற்கும் விதமாக வெள்ளிக்கிழமை 4-ஆவது நாளாக மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு, சங்க மாவட்டச் செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் மரிய கொரட்டி, இசக்கியப்பன், மாவட்ட துணைச் செயலா் அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த மறியல் போராட்டத்தில் 40 போ் கைது செய்யப்பட்டனா்.