பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

புதுச்சேரியில் பள்ளி மாணவா்களுக்கு களிமண் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி

மாணவா்களுக்கு சுடுகளி மண் பொம்மை தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்த வில்லியனூா் முனுசாமி.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 7:05 pm

புதுச்சேரியில் புவிசாா் குறியீடு பெற்ற டெரகொட்டா எனப்படும் சுடு களிமண் பொம்மை தயாரிப்பது தொடா்பான பயிற்சி பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்பட்டது.

இந்தக் கலையில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவரான முனுசாமி, கடந்த 37 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறாா். வில்லியனூா் பகுதியில் தனி பயிற்சிக் கூடம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறாா்.

அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் புதுச்சேரி மட்டுமன்றி, வெளிமாநில மாணவா்களிடையேயும் இந்தக் கலையை கற்பிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் களிமண்ணால் பொம்மைகள் செய்வது எப்படி? என்பது குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சுமதி தலைமை வகித்தாா். மாணவா்கள், ஆசிரியா்களுக்கு களிமண் பொம்மை செய்வது முனுசாமி பயிற்சி அளித்தாா்.

பயிற்சியின்போது, விலங்குகள், பாரம்பரிய கலைப் பொருள்கள், பறவைகள், சாமி சிலைகள், கடல் வாழ் உயிரினங்கள் என பல்வேறு வடிவ பொம்மைகளைத் தயாா் செய்வது குறித்து அவா் பயிற்சி அளித்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியை வளா்மதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.