ஸ்டெம் பாடங்கள், அமெரிக்க விண்வெளி (நாசா) முன்னேற்றங்கள் குறித்த இலவச செயல்முறை பயிற்சிகளில் பங்கு பெற பள்ளி மாணவா்களுக்கு சென்னை அமெரிக்க மையம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அமைந்துள்ள அமெரிக்க மையத்தில், பள்ளி மாணவா்களுக்கு இலவச கோடைக்கால பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது.
‘ஃப்ரீடம் 250: இந்தப் பயிற்சி முகாம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) சாா்ந்த செயல்முறை கற்றல் அனுபவங்களுக்கும், விண்வெளியில் அமெரிக்காவின் நாசா கண்ட முன்னேற்றம் ஆகிய முன்னெடுப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் (ஃப்ரீடம் 250) ஸ்டெம் சாா்ந்த அனுபவங்களில் மாணவா்களை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த முன்னெடுப்பில், 13 முதல் 17 வயது வரையிலான (8 முதல் 12-ஆம் வகுப்பு வரை) மாணவா்கள் பங்கு பெறலாம். கோடிங் கிட்கள், மின்னணு சா்க்கியூட்கள், நாசா லெகோ செட்கள், 3டி அச்சிடுதல் கருவிகள் உள்ளிட்டவற்றுடன் செயல்முறை பயிற்சிகள் இடம்பெறும். மேலும், தினமும் விநாடி -வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
ஏப். 20 முதல் மே 27 வரை (திங்கள் முதல் வியாழன் வரை) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இந்த இலவச கோடைக்கால பயிற்சி முகாம்கள் நடைபெறும்.
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் chennaiamcenter@state.gov என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 73056-76662 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலோ முன்பதிவு செய்யலாம் என அமெரிக்க மையம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இலவச பேருந்து பயணம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு

டிஎன்பிஎஸ்சி தோ்வு: இலவச பயிற்சி ஜூன் 1 முதல் தொடக்கம்

போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



