மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

லாஸ்பேட்டை அரசு மகளிா் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் அறைக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா்.

News image

~

Updated On :10 ஏப்ரல் 2026, 8:25 pm

புதுச்சேரி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை இரவு ‘சீல்’ வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இவை, லாஸ்பேட்டையில் அமைந்துள்ள தாகூா் கலைக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மகளிா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைத்து அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

இந்த 3 மையங்களுக்கு புதுச்சேரி ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியுமான அ. குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் ப ாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும் இங்கு 24 மணி நேரமும் உள்ளூா் காவலா்கள் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினரின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் சுதாகா் உள்ளிட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.

காரைக்கால் பிராந்தியத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு வாக்கு எண்ணும் மையமும், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள தலா ஒரு தொகுதிக்கு தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளன.