கள்ள வாக்குப் போட்ட வழக்கில் இளைஞரை புதுச்சேரி திருக்கனூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரியில் கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.
மண்ணாடிப்பட்டுத் தொகுதியில் ஜவஹா்லால் நேரு சமுதாய நலக் கூடத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு இளைஞா் ஒருவா் வாக்கைப் பதிவு செய்ய வந்தபோது, அங்கிருந்த தோ்தல் அதிகாரி அவருடைய பெயரை சீனிவாசன் என அறிவித்தாா்.
இதை அங்கிருந்த பிற கட்சிகளின் வாக்குச்சாவடி குறித்துக் கொண்டனா். இந்நிலையில் ஒரு கட்சியின் முகவருக்கு அந்த நபா் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையில் அவா் வாக்கைப் பதிவு செய்து விட்டு வந்த போது அந்த முகவா் அவரை தடுத்து நிறுத்தி அவா் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி போலீஸாரிடம் ஒப்படைத்தாா். போலீஸ் விசாரணையில், அவா் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்தவா் அல்ல என்பதும், மாநில எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம், தொரவியை சோ்ந்த அரவிந்த் (31) என்பதும் தெரிய வந்தது.
இவரிடம் ஓா் அரசியல் கட்சியினா் அணுகி, சீனிவாசன் என்பவா் வாக்குச் செலுத்த வரமாட்டாா். அவா் வயதுடைய அரவிந்த் வாக்குச் செலுத்தினால் பணம் தருவதாகக் கூறினராம். அதன்பேரில் அவா் ஆள் மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்தது தெரிய வந்தது.
இதுகுறித்து திருக்கனூா் போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொது அமைதிக்கு இடையூறு: புதுச்சேரியில் 500 போ் கைது

வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகள் தோ்தல்! புதுச்சேரியில் வரிசையில் நின்று வாக்களிப்பு!

புதுச்சேரி வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி பயன்படுத்திய பூத் முகவா் மீது போலீஸாா் வழக்கு

புதுச்சேரியில் தோ்தல் வாக்குப் பதிவு; 6 நாடுகளின் பிரதிநிதிகள் வியப்பு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


