மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழ்நாடு

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான செய்திகள் தினமணி இணையத்தில் நேரலையில்...

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுவை வாக்குப்பதிவு

Updated On :9 ஏப்ரல் 2026, 7:09 pm
1:29 am, 9 ஏப்ரல் 2026

புதுவையில் இன்று வாக்குப் பதிவு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

1:42 am, 9 ஏப்ரல் 2026

30 தொகுதிகளில் வாக்குப் பதிவு

யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் காண்பதால் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.

1:49 am, 9 ஏப்ரல் 2026

ராஜ்பவன் தொகுதியில் பசுமை வாக்குச்சாவடி

ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஓலைகள், தோரணங்கள், இலைகள் கொண்டு வாக்குச்சாவடி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை வாக்குகளை அதிகரிக்கும் நோக்கத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1:51 am, 9 ஏப்ரல் 2026

காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்

புதுச்சேரி வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கோடை வெய்யிலைத் தவிர்க்கும் வகையில் காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

1:56 am, 9 ஏப்ரல் 2026

பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள்

புதுச்சேரியில் பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்கு ஒன்று என அமைக்கப்பட்டுள்ள, 30 மகளிர் வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

2:17 am, 9 ஏப்ரல் 2026

புதுவை பெண்களுக்கு மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடியின் எக்ஸ் தளப் பதிவு: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடங்கும் வேளையில், வாக்காளர்கள் அனைவரும் பெருமளவில், முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, நமது இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் ஜனநாயகச் செயல்முறையை வலுப்படுத்த முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பதிவிட்டுள்ளார்.

2:44 am, 9 ஏப்ரல் 2026

தனித்துவமான வாக்குச்சாவடி 

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வாக்குச் சாவடி, பாரம்பரியத்தையும் வரலாற்றையும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. வருவோர் அனைவருக்கும் இருக்கை. டோக்கன் முறையில் அழைப்பு. முதலில் 50 டோக்கன். வாக்கு செலுத்த வந்தோருக்கு பூக்கள் கொடுத்து வரவேற்பு...

டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டிருக்கும் வாக்காளர்கள்

டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டிருக்கும் வாக்காளர்கள் - DIN

3:08 am, 9 ஏப்ரல் 2026

காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய 5 பேரவைத் தொகுதிகள் உள்ளன.

பேரவைத் தேர்தலையொட்டி மாவட்டத்தில் 181 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்துவருகிறார்கள்.

காரைக்காலில் வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்

காரைக்காலில் வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்

3:10 am, 9 ஏப்ரல் 2026

தனித்துவமான வாக்குச்சாவடிகள்

காரைக்கால் மாவட்டத்தில் பசுமை பார்வையில் தனித்துவமான வாக்குச் சாவடி, பிங்க் நிற வாக்குச் சாவடி, மகளிர் மட்டும் பணியாற்றக்கூடிய வாக்குச் சாவடிகள் என தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் பல தொகுதிகளில் தனித்துவமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடி

காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடி

4:18 am, 9 ஏப்ரல் 2026

9 மணி நிலவரம் - 17.41% வாக்குப்பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவையில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி, 17.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் 16.23 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 17.87 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

4:21 am, 9 ஏப்ரல் 2026

பைக்கில் சென்று வாக்களித்த ரங்கசாமி

புதுவை முதல்வர் ரங்கசாமி இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு செலுத்தினார். திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக, தட்டான்சாவடியில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்த ரங்கசாமி

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்த ரங்கசாமி - ANI

5:07 am, 9 ஏப்ரல் 2026

திருக்கனூரில் பாஜக - காங்கிரஸ் வாக்குவாதம்

புதுச்சேரி திருக்கனூர் பகுதி வாக்குச்சாவடியில் பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதை, காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கலைக்க காவல் துறை தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

5:49 am, 9 ஏப்ரல் 2026

11 மணி நிலவரம் : 37.06% வாக்குப்பதிவு

புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 37.06% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அஸ்ஸாமில் 38.92% வாக்குகள் பதிவாகியுள்ளன.

6:01 am, 9 ஏப்ரல் 2026

காரைக்கால் வாக்கு இயந்திரத்தில் புகை

காரைக்கால் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் விவிபேட் கருவியின் பேட்டரியில் இருந்து புகை வந்ததால் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. வாக்காளர்கள் காத்திருக்க அறிவுறுத்தப்பட்டு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. இதனால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

7:08 am, 9 ஏப்ரல் 2026

புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்!

பாஜக மாநில செயலாளர் வில்லியனூரில் மோகன் குமார் வாக்கு செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ''மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இங்கு இரட்டை என்ஜின் அரசை மக்கள் விரும்புகின்றனர். அனைவரும் ஒரு வளர்ந்த புதுச்சேரிக்காக வாக்களித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சியைப் பெறவே பொதுமக்கள் விரும்புகின்றனர். இங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்''

9:38 am, 9 ஏப்ரல் 2026

1 மணி நிலவரம்: 56.83% வாக்குகள் பதிவு!

புதுச்சேரியில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

9:58 am, 9 ஏப்ரல் 2026

வாக்காளர்களைக் கவர்ந்த ரோபோ நிலா!

புதுச்சேரியில் ரோபோ நிலா வாக்காளர்களுக்கு ரோஜா பூ கொடுத்து அசத்தலான வரவேற்று அளித்து வாக்காளர்களைக் கவர்ந்தது.

10:21 am, 9 ஏப்ரல் 2026

3 மணி நிலவரப்படி 72.40% வாக்குகள்!

புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72.40% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

12:16 pm, 9 ஏப்ரல் 2026

5 மணி நிலவரப்படி 72.40% வாக்குகள் பதிவு!

புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 72.40 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி காரைக்காலில் 84.13 சதவிகிதமும், புதுச்சேரியில் 87.47 சதவிகிதமும் பதிவாகியுள்ளன.

12:40 pm, 9 ஏப்ரல் 2026

புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

களத்தில் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

2:28 pm, 9 ஏப்ரல் 2026

புதுவையில் 89.65% வாக்குப் பதிவு

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் 89.65% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.