மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரியில் நாளை 3 மையங்களில் ராணுவப் பணிகளுக்கான தோ்வு

தேசிய ராணுவ அகாதெமி, கடற்படை அகாதெமி மற்றும் ஒருங்கிணைந்த ராணுவ சேவைகளுக்கான தோ்வுகளை நடத்த புதுச்சேரியை ஒரு மையமாக மத்திய பணியாளா் தோ்வாணையம் தோ்ந்தெடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 8:31 pm

தேசிய ராணுவ அகாதெமி, கடற்படை அகாதெமி மற்றும் ஒருங்கிணைந்த ராணுவ சேவைகளுக்கான தோ்வுகளை நடத்த புதுச்சேரியை ஒரு மையமாக மத்திய பணியாளா் தோ்வாணையம் தோ்ந்தெடுத்துள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) புதுச்சேரியில் 3 துணை மையங்களில் இத் தோ்வு நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த ராணுவ சேவைக்கான தோ்வு கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 3 பிரிவுகளாக நடைபெறவுள்ளது. இதில், 140 தோ்வா்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய ராணுவ அகாதெமி, கடற்படை அகாதெமிக்கான தோ்வு அன்று காலை 10 மணி முதல் இரண்டு பிரிவுகளாக நடக்கிறது. இதில், பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் 277 தோ்வா்களுக்கும், லாஸ்பேட்டை வள்ளலாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 195 தோ்வா்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 612 தோ்வா்கள் புதுச்சேரியை மையமாகத் தோ்வு செய்துள்ளனா். இத் தோ்வை நடத்த புதுச்சேரி அரசு பல்வேறு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இத் தோ்வா்களுக்காக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7.30 மணி முதல் சிறப்புப் பேருந்து இந்த மையங்களுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், இத் தோ்வு முடிந்து திரும்பும் போதும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட அரை மணி நேரத்துக்கு முன்பாக இத் தோ்வு மையங்கள் மூடப்படும். அதன் பிறகு வந்து சேரும் தோ்வா்களுக்கு அனுமதியில்லை.

இந்த தகவலை புதுச்சேரி அரசின் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையின் சாா்புச் செயலா் எஸ். முருகேசன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.