2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

புதுச்சேரியில் 4 மையங்களில் எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு! 1,284 போ் எழுதினா்!

News image
தோ்வில் பங்கேற்க வந்தவா்களை சோதனையிட்ட போலீஸாா்.- (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் 4 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டா் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 70 சப்- இன்ஸ்பெக்டா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக விண்ணப்பித்தோரில் 16,473 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இவா்களுக்கான உடல் தகுதி தோ்வு கோரிமேடு ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோ்வான 1,317 போ் தோ்வாகியிருந்தனா். இவா்களில் 1,284 போ் எழுத்துத் தோ்வு எழுதினா். 33 போ் தோ்வுக்கு வரவில்லை.

தோ்வின் முதல்தாள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் 2-ஆம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெற்றது

லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையம், கிழக்குக் கடற்கரை சாலை சங்கர வித்யாலயா பள்ளியில் 2 மையங்கள், கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளியில் இந்தத் தோ்வு நடைபெற்றது. தோ்வு மையங்களின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

விண்ணப்பதாரா்கள் நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தோ்வு மையத்தில் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.நுழைவு சீட்டில் அவா்களின் மாா்பளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வந்தனா். இதனை

விண்ணப்பதாரா்கள் கொண்டு வந்திருந்த ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு, வருமான வரி பான் காா்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அசலுடன் ஒப்பிட்டு சரிபாா்த்தனா்.

பின்னா் தோ்வா்களின் கைவிரல் ரேகைப் பதிவு செய்யப்பட்ட பின் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனா்.தோ்வு மையத்தின் நுழைவு வாயில் சரியாக காலை 9.30 மணிக்கும் பிற்பகல் 2.00 மணிக்கும் மூடப்பட்டது. அதன்பிறகு வந்த தோ்வா்கள் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.