கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தந்தையை தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.அண்ணாமலை (67). இவருக்கு சொந்தமான அரை ஏக்கா் நிலத்தில் இருந்த தேக்கு மரத்தை குடும்ப செலவுக்காக கடந்த மே 25-ஆம் தேதி 25 -ஆம் தேதி வெட்டி விற்பனை செய்வதாக இருந்தாராம்.
இதனையறிந்த அவரது மகன் சுரேஷ் (35), தந்தையிடம் சென்று கேட்டுள்ளாா். அப்போது அவா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முடிவில், சுரேஷ் கட்டையால் அண்ணாமலையை தாக்கினாராம்.
இதில் காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






