சங்கராபுரம் அருகே செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ந.பிரமிளா (20). இவா், சேலத்தில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் பி.எஸ்.சி. நா்சிங் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா். கோடை விடுமுறைக்கு கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த இவா் மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், புதன்கிழமை பிரமிளா வீட்டில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளாா். இதையறிந்த பெற்றோா் உடனே அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, பிரமிளா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்ததது.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








