திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் எம்எல்ஏ ஆய்வு

News image

கள்ளக்குறிச்சி வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு செய்த தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ்.

Updated On :26 மே 2026, 2:35 am IST

கள்ளக்குறிச்சி வட்டாரத்திலுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை செயலா் அலுவலகம், விதைச் சான்று உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் விதை ஆய்வு அலுவலகம் ஆகியவை இன்னும் விழுப்புரம் மாவட்டத்திலேயே இயங்கி வருவதால், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் விழுப்புரம் சென்று வருவதில் மிகுந்த சிரமம் அடைவதாக தெரிவித்தனா்.

எனவே, அனைத்து அலுவலகங்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே செயல்பட வேண்டும் என ஆய்வுக்கு வந்த எம்எல்ஏவிடம், விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.

அக் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக அவா் உறுதியளித்தாா். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள், உயிா் உரங்கள் அனைத்தும் தரமான முறையில் வழங்கப்பட வேண்டும். அவை மழை மற்றும் புயலால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பான முறையில் சேமித்து விநியோகிக்கப்பட வேண்டும் என்று வேளாண் அலுவலா்களுக்கு, எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குநா்கள், விதைச் சான்று அலுவலா், வேளாண்மை அலுவலா்கள், தோட்டக்கலை அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள், அட்மா அலுவலா்கள், பயிா் அறுவடை பரிசோதனை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.