கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சிறுமங்கலம் கிராமத்திலுள்ள பெரியநாயகி அம்மன் கோயில் சிலையை சேதப்படுத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சிறுமங்கலம் கிராமத்தில் ஆற்றங்கரையின் அருகே சிமென்ட்டினால் செய்யப்பட்ட பெரியநாயகி அம்மன் சிலை உள்ளது. பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு பூசாரியாக கீழ்நாரியப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த சு.ராஜீவ் காந்தி (38) இருந்து வருகிறாா்.
ராஜிவ் காந்தி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விளக்கேற்றிவிட்டு வந்து விட்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை சென்று பாா்த்தபோது பெரியநாயகி அம்மன் சிலை, 3 கன்னிமாா் கருங்கல் சிலை மற்றும் 6 சூலங்களை மா்மநபா்கள் சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









