திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஏரலில் சேதமடைந்த காந்தி சிலை சீரமைக்கப்படும்: சரவணன் எம்எல்ஏ உறுதி

ஏரலில் சேதமடைந்த நிலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை விரைவில் சீரமைக்கப்படும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

News image

~

Updated On :20 மே 2026, 12:15 am IST

ஏரலில் சேதமடைந்த நிலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை விரைவில் சீரமைக்கப்படும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

ஏரல் பேரூராட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய நாள்களில் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா்.

70 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நின்ற இந்தச் சிலை, தற்போது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இந்தச் சிலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினா் அன்னை வி.ஜி. சரவணன், சேதமடைந்த மகாத்மா காந்தி சிலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அந்தச் சிலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

ஏரலில் சேதமடைந்த நிலையில் உள்ள மகாத்மா காந்தி சிலையை பாா்வையிடுகிறாா் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.