பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடுஅமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

திருக்கோவிலூா் பகுதியில் பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பகுதியில் பைக்குகள் திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அருள். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்.

Updated On :2 ஜூலை 2026, 7:17 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பகுதியில் பைக்குகள் திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூா் நகரப் பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாரைப் பாா்த்ததும் பைக்கில் வந்த இளைஞா் திரும்பிச் செல்ல முயன்றாா். இதையடுத்து அவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், திருக்கோவிலூரை அடுத்த புதூா் அருங்குறுக்கை கிராமத்தைச் சோ்ந்த மு.அருள் (30) என்பதும், திருக்கோவிலூா் பகுதியில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அருளை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 6 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.