ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது பற்றி...

CPIM Greets TN CM Vijay

மார்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் - முதல்வர் விஜய். - கோப்புப்படம்

Published On :2 ஜூலை 2026, 7:38 pm IST

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னதாக, தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதையடுத்து, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தெவெகவில் இன்று இணைந்தனர்.

இதுகுறித்து பெ. சண்முகம் பேசியதாவது:

ஏற்கெனவே, நான்கு எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்களுடைய கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தோம். இது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல். இதுபோன்ற நடவடைக்கைகளை ஊக்குவிக்கக்கூடாது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் தவெக தலைமையிடமும் எங்களுடைய கருத்துகளை தெரிவித்திருந்தோம்.

அதற்கு தவெக தரப்பில், அவர்கள் (அதிமுக எம்எல்ஏக்கள்) தானாக முன்வந்து ராஜிநாமா செய்கிறார்கள் அதை நாங்கள் எப்படி தடுக்க முடியும் ? என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போதே ‘நீங்கள் ஏன் கட்சியில் சேர்த்துக் கொள்கிறீர்கள்? இந்த வாய்ப்பு அவர்களுக்கு வேறொரு இடம் உள்ளது என்று ஊக்கம் கொடுப்பது போலத்தானே உள்ளது’ என்ற என்ற அதிருப்தியை தவெக தலைமையிடத்தில் தெரிவித்திருந்தோம். இப்போதும் இதுதான் எங்கள் நிலைப்பாடு என்று பெ. சண்முகம் தெரிவித்தார்.

Summary

CPI(M) State Secretary P. Shanmugam has stated that AIADMK MLAs joining TVK constitutes unhealthy politics.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.