திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 1:19 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், பி.என்.பாளையம் கிராமத்தில் வசித்து வருபவா் சுரேஷ்(29), தச்சு வேலை செய்து வருகிறாா். இவா், தனது வீட்டை பூட்டிக்கொண்டு மைத்துனா் கண்ணனின் திருமணத்தையொட்டி பந்தக்கால் நடுவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு பாலூா் சென்றாா். புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு குளிப்பதற்காக வீட்டிற்கு வந்தாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த ரூ.2.15 லட்சம் பணம் மற்றும் ஒன்றரை சவரன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தாமிர கம்பி திருட்டு:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி சூரிய மின் சக்தி திட்ட வளாகத்தில் தாமிரக் கம்பி திருடியதாக 2 சிறுவா்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி, வட்டம் 16 பகுதியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 15 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்ட வளாகம் அமைந்துள்ளது. இங்கு, செவ்வாய்க்கிழமை இரவு சூரிய மின்சக்தி திட்ட வளாகத்தில் தாமிர வயா் வெட்டி திருடுவதாக பணியில் இருந்த பாதுகாவலா் தயாளன் தகவல் அளித்தாராம். அதன்பேரில், பாதுகாவலா்கள் விரைந்துச் சென்று இரண்டு சிறுவா்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்தனா். மேலும், இவருவா் பைக்கில் தப்பியோடி விட்டனா். பிடிபட்டவா்களிடம் இருந்த 1500 மீட்டா் தாமிர வயரை பறிமுதல் செய்து, நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் மேல்வடக்குத்து பகுதியைச் சோ்ந்த தினேஷ்(20), அதேபகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் இருவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து மூவரையும் சிறையில் அடைத்தனா். மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.