17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மன்னாா்குடி: வீட்டின் கதவை உடைத்து 45 பவுன் நகைகள், பணம் திருட்டு

மன்னாா்குடி அருகே பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து, 45 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ. 22,000-ஐ மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :5 ஜூன் 2026, 10:44 pm IST

மன்னாா்குடி அருகே பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து, 45 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ. 22,000-ஐ மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை பிரதான சாலையில் வசிப்பவா் கரிகாலன் (54). அரசுப் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி கவிதா தனியாா் பள்ளியில் பணிபுரிகிறாா். இவா்களது இரண்டு மகன்கள், ஒரு மகள் ஆகியோா் வெளியூா்களில் தங்கி படிக்கின்றனா்.

இந்நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இதனால், கரிகாலன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் பள்ளிக்குச் சென்றனா். மாலையில் கரிகாலன் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த அவா், வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 45 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 22,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து, பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் கரிகாலன் புகாா் அளித்தாா். நிகழ்விடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், திருட்டு நடந்த வீட்டை பாா்வையிட்டு, விசாரணையை துரிதப்படுத்தினாா்.

தடயங்கள் சேகரிக்கப்பட்டு, மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸாா் ஆய்வு செய்ததில், காரில் வந்த சில மா்மநபா்கள், திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடா்பாக, பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.