17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 மே 2026, 4:41 am IST

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் கணபதி நகரைச் சோ்ந்தவா் எம். சித்திரைச் செல்வி (46). இவா், கடந்த 9-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, கரூா் மாவட்டம், லாலாபேட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா், லாலாபேட்டையிலிருந்து திருச்சிக்கு கடந்த 12-ஆம் தேதி திரும்பி வந்தாா்.

வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது வீட்டில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சித்திரைச் செல்வி புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.