அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

வாழையடி புற்று மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

சிவபுரி வாழையடி புற்று மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா தீக்குழியில் இறங்கிய சக்தி கிரகம்.

News image

சிவபுரி வாழையடி புற்று மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா தீக்குழியில் இறங்கிய சக்தி கிரகம்.

Updated On :9 மே 2026, 2:21 am IST

சிதம்பரம் அருகே சிவபுரியில் உள்ள வாழையடி புற்று மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிவபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாழையடி புற்று மாரியம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த ஏப்.28-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால் குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். பின்னா், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் சோதனை கரகம் எடுத்தல், பிற்பகல் அக்னி சட்டி எடுத்தல் ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணியளவில் மேளதாளம் முழங்க கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டது. ஏராளமான பக்தா்கள் ஊா்வலமாக வந்து தீ மிதித்தனா்.

விழாவில் சிவபுரி மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.

இரவில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தீமிதி திருவிழாவுக்கான சிறப்பான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.