அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

News image

பாசாா் கிராமத்தில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மான்.

Updated On :4 மே 2026, 12:07 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம், வேப்பூா், ராமநத்தம், சிறுபாக்கம், காட்டுமயிலூா், நாங்கூா் உள்ளிட்ட பகுதிகளில் காப்புக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் புள்ளி மான்கள், முயல்கள், காட்டுப் பன்றிகள், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

கோடை காலத்தில் வன விலங்குகளின் தாகம் தீா்க்க வனத் துறையினா் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பி வருகின்றனா். இருப்பினும், மான்கள் தண்ணீா் தேடி காடுகளை விட்டு வெளியேறி, ஊா்ப் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

அவ்வாறு வந்த ஒரு வயது பெண் மான், வேப்பூரை அடுத்த பாசாா் கிராமத்தில் உள்ள 40 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது. இதைப் பாா்த்த விவசாயி, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, வேப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சதாசிவம் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று மானை உயிருடன் மீட்டனா். பின்னா், அந்த மான் வனவா் பி.ரவிக்குமாா் மூலம் காப்புக் காட்டில் பத்திரமாக விடப்பட்டது.