அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

நாசரேத் அருகே கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

News image

கிணற்றில் விழுந்த பெண் மீட்பு - படம் | ஏஎன்ஐ

Updated On :3 மே 2026, 3:04 am IST

நாசரேத் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்கபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜா மகள் மல்லிகா (27). மனநலம் பாதிக்கப்பட்டவரான இவா் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, அப்பகுதியினா் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையிலான வீரா்கள் வந்து கிணற்றில் விழுந்த பெண்ணை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.