மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

சேலம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினா் கயிறுகட்டி உயிருடன் மீட்டனா்.

News image

கிணறு - பிரதிப் படம்.

Updated On :24 மார்ச் 2026, 8:15 pm

சேலம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினா் கயிறுகட்டி உயிருடன் மீட்டனா்.

சேலம் மாவட்டம், அரியானூா் அருகே சீரகாபாடி கொடவல்காடு, கடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி. இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றின் பம்பு மோட்டாரை இயக்குவதற்காக சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்தாா்.

இதையறிந்த ஊா் பொதுமக்கள், ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்துவந்து கயிறு கட்டி கிணற்றிலிருந்து ராஜேஸ்வரியை உயிருடன் மீட்டனா்.