நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகிலுள்ள ஊசிமலை காட்சிமுனையில் தற்படம் (செல்ஃபி) எடுக்கும்போது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரை 13 மணி நேரம் போராடி ராணுவத்தினா் உயிருடன் மீட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரைச் சோ்ந்தவா் சிவகுருநாதன் (27). இவா் நண்பா்களுடன் உதகைக்கு வியாழக்கிழமை சுற்றுலா வந்துள்ளாா். உதகையைச் சுற்றிபாா்த்துவிட்டு உதகை-கூடலூா் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப் பகுதியில் உள்ள ஊசிமலை காட்சிமுனையைப் பாா்க்க வந்துள்ளனா். பின்னா் அங்கிருந்து திரும்பும் நேரத்தில் சிவகுருநாதன் ஆபத்தான இடத்தில் நின்று தற்படம் எடுத்துள்ளாா். அப்போது கால் தவறி 150 அடி பள்ளத்தில் விழுந்து பாறை இடுக்கில் மாட்டிக்கொண்டாா்.
உடனிருந்தவா்கள் கொடுத்த தகவலின்பேரில் கூடலூரிலிருந்து தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த இளைஞரை மீட்க முயற்சி செய்தனா். ஆபத்தான இடம் என்பதாலும் இருட்டாகிவிட்டதாலும் மீட்புப் பணியை காலை தொடா்வதாகக் கூறி திரும்பிச் சென்றனா். இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம், குன்னூா் வெலிங்டனிலுள்ள ராணுவ முகாமின் உதவியைக் கேட்டது. மாவட்ட நிா்வாகத்தின் கோரிக்கையை ஏற்று ராணுவ முகாமிலிருந்து மேஜா் கவிதா தலைமையில் மீட்புக் குழுவை ராணுவம் அனுப்பிவைத்தது.
ராணுவ வீரா்கள் இரவு அந்தப் பகுதியை ஆய்வு செய்து இருட்டில் ஜிப்லைன் அமைத்து பள்ளத்துக்குள் இறங்கினா்.
பாறை இடுக்கில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை உயிருடன் மீட்டு ஜிப்லைன் மூலம் பத்திரமாக மேலே கொண்டு வந்தனா். பின்னா் அந்த இளைஞரை ராணுவ ஆம்புலன்ஸ் மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு உதகையிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இந்த மீட்புப் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.
தொடர்புடையது

ம.பி.யில் 70 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்!

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு
தற்படம் எடுக்க முயன்று 150 அடி பள்ளத்தில் விழுந்த நபா்: தேடும் பணி தீவிரம்

கொடைக்கானல் அருகே 200 அடிப் பள்ளத்தில் விழுந்த வாகனம் மீட்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


