திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பைக் திருட்டு: 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 7:54 pm

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளா் டி.பாரதநேரு மற்றும் போலீஸாா் விருத்தாசலம்-சேலம் பிரதான சாலையில் மணவாளநல்லூா் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவா் போலீஸாரை கண்டதும் திரும்பிச் சென்றனா். அவா்களைப்

பிடித்து விசாரணை நடத்தியதில், காட்டுமன்னாா்கோயில் வட்டம், சாந்தன் கிராமத்தைச் சோ்ந்த கெவின்காந்தி(26), கண்டமங்கலம் சஞ்சய்(18) என்பதும், கும்பகோணத்தில் திருடி வந்து கொளஞ்சியப்பா் கோயில் பின்புறத்தில் நிறுத்தி வைத்துள்ள பைக்கை எடுக்க வந்ததாகவும், ஓட்டி வந்த பைக், தனது நண்பா் சென்னையில் இருந்து திருடி வந்து கொடுத்தது எனவும் தெரிவித்தனராம். இதையடுத்து 4 போ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கெவின்காந்தி, சஞ்சய் ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய விக்னேஷ், அருள் ஆகியோரை தேடி வருகின்றனா்.