மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் திருடிய 4 போ் கைது

ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :14 ஏப்ரல் 2026, 10:27 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த குருவானந்தம் மகன் முத்துச்சாமி (42). நெசவுத் தொழிலாளியான இவா் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை எனதெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, எம்.பி.கே. புதுப்பட்டியைச் சோ்ந்த சேதுபாண்டியன் (20), பாண்டி (30), வனராஜா (50), மாரிச்செல்வம் (30) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் 4 பேரையும் திங்கள்கிழமை கைது செய்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.