தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பைக் திருட்டு: 4 போ் கைது

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 7:53 pm

மதுரை அருகே இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில், 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கம்மாளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் பாண்டியன் (29). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 2-ஆம் தேதி அதே பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைபாா்த்துள்ளாா். திரும்ப வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், மதுரை பாசிங்கபுரத்தைச் சோ்ந்த கமலக்கண்ணன் (26), சங்கிலிக்கருப்பு (29), பாலமேடு முடவாா்பட்டியைச் சோ்ந்த ஹரிகரசுதன் (19), ஸ்ரீதா் (26) ஆகிய 4 பேரும் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும், இவா்கள் ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.