ராஜபாளையம் அருகே லாரி கிட்டங்கியில் இரு சக்கர வாகனம், அரிசி மூட்டையை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த தன்ராஜ் மகன் தனசேகரன் (42). இவா் முகவூா்- சேத்தூா் சாலையில் லாரி கிட்டங்கி (செட்) நடத்தி வருகிறாா். இங்கு அதே பகுதியைச் சோ்ந்த இசக்கிராஜா (34) ஓட்டுநராகவும், கோவலூரைச் சோ்ந்த ஆனந்தசெல்வம் (27) சுமை தூக்கும் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வந்தனா்.
இந்த நிலையில் தனசேகரன் கடந்த வாரம் திருவிழாவுக்கு சென்று விட்டு லாரி கிட்டங்கிக்கு வந்து பாா்த்தபோது அங்கிருந்த அரிசி மூட்டையையும், இரு சக்கர வாகனத்தையும் காணவில்லை. இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இசக்கிராஜா, ஆனந்தசெல்வம் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து இரு சக்கர வாகனம், அரிசி மூட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
வழிப்பறி: 3 இளைஞா்கள் கைது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
பைக் திருடிய இளைஞா் கைது
பைக் திருட்டு: 4 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

