விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த புத்தூா் பகுதியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி நென்மேனி பகுதியில் உள்ள கண்மாயில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா் மூதாட்டியை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தாராம். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடி வந்தனா். இதையடுத்து, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். இதில் காயமடைந்த மூதாட்டியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் அந்த இளைஞா் புத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடப்பன் மகன் மாரிமுத்து (30) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


