மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது

போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 பேரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:00 am

போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 பேரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.

பெங்களூரில் வியாழக்கிழமை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்தது தொடா்பாக வழக்குப்பதிந்துள்ள போலீஸாா், 10 பேரை கைதுசெய்துள்ளனா்.

இவா்களில் 2 பெண்கள் உள்பட 3 போ் வெளிநாட்டை சோ்ந்தவா்கள். இவா்களிடம் இருந்து 5 கிலோ எம்.டி.எம்.ஏ., ஒருகிலோ கொகைன், 21 கிலோ கஞ்சா, 19 கிராம் போதைப்பொருள் மாத்திரைகள், குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

போலீஸாா் கைப்பற்றியுள்ள போதைப்பொருள்களின் மதிப்பு ரூ.11.81கோடி என மதிப்பிட்டிருந்தாலும், இதன் சந்தைமதிப்பு ரூ.23.63கோடியாகும் என்று போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக எலஹங்கா நியூடவுன், தேவா்ஜீவனஹள்ளி, கோரமங்களா, பொம்மனஹள்ளி, புலிகேசிநகா் காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின்போது குற்றச்செயல்களை ஒப்புக்கொண்ட குற்றவாளிகள், கல்லூரி மாணவா்களை குறிவைத்து செயல்பட்டதாக தெரிவித்ததாக போலீஸாா் கூறினா். கைதுசெய்யப்பட்ட 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்திய போலீஸாா், சிறையில் அடைத்தனா்.