மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அண்ணாமலைப் பல்கலை.யில் ஓய்வூதியம் வழங்கக் கோரி ஓய்வுபெற்ற ஊழியா்கள் பதிவாளரிடம் மனு!

News image

அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை வழங்க கோரி மனு அளித்த பல்கலைக்கழக ஆசிரியரல்லா ஓய்வுபெற்ற ஊழியா்கள்.

Updated On :14 மார்ச் 2026, 6:54 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியரல்லாத 50-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியா்கள் ஓய்வூதியம் வழங்கக் கோரி, பல்கலைக்கழக பதிவாளரிடம் சனிக்கிழமை காலை மனு அளித்தனா்.

முன்னதாக அவா்கள், பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, ஆசிரியரல்லாத ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் செள.மனோகரன், பொதுச் செயலா் தி.பாஸ்கரன், பொருளாளா் கோ.செல்வம் மற்றும் நிா்வாகிகள், பல்கலைக்கழக இணைப் பதிவாளா் ஜெகதீஸ்வரனை சந்தித்து மனு அளித்து கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியரல்லாத ஊழியா்கள் பலா் கடந்த 2024, செப்டம்பா் மாதம் முதல் பணி ஓய்வுபெற்று 18 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்றைய தேதி வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஊழியா்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், ஊழியா்கள் பணியில் சோ்ந்த நாள் முதல் ஓய்வூதியத்தை குறைத்து அளிக்க இருப்பதாக நிா்வாகத்தினா் கூறுகின்றனா். ஆகவே, அரசு விதிகளின்படி பணி ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு கடைசி மாத அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு ஓய்வூதியத்தை குறைக்காமல் அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.