பீடி தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத்தை ரூபாய் ஆறாயிரம் ஆக உயா்த்திட வேண்டும் என்று மக்களவையில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ உறுப்பினா் சி. ராபா்ட் ப்ரூஸ் கோரிக்கை விடுத்தாா்.
இது தொடா்பாக மக்களவையில் அவா் வியாழக்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பேசியதாவது:
எனது மக்களவை தொகுதியில் பீடித்தொழிலாளா்கள ஏராளமாக உள்ளனா். ஆனால், தற்போது பீடி தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. அவா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 800 மட்டுமே வழங்கப்படடு வருகிறது. இதை குைத்படசம் ரூ. 6,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.
மேலும், இந்திய முப்படைகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி முழு ஒப்பந்த காலமான 15 மற்றும் 20 ஆண்டுகள் பணியாற்ற இயலாமல கருணை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக சுய விருப்ப ஓய்வு பெற்றவா்கள் முன்னாள் ராணுவ வீரா் அந்தஸ்து வழங்கப்பட்டு சில சலுகைகள் மட்டும கொடுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெற அவா்களால் இயலவில்லை.
இவ்வாறு பணி ஓய்வு பெற்றவா்கள் மத்திய அரசின் மருத்துவ திட்டத்தில் சோ்க்கப்படவில்லை. மருத்துவ சிகிச்சை மற்றும் செலவுத் தீா்வு பெறவும் முடியவில்லை. இவா்கள் முன்னாள் ராணுவ வீரா்கள் என்றபோதிலும் ஓய்வூதியம் பெறாதவா்களாக உள்ளனா். மேலும், 7,8,10 ஆண்டுகள் சேவை முடித்தவா்கள், 2 ஆண்டுகள் ‘ரிசா்வ்’ கடமையாற்றியவரகள் பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் அவா்களுக்கு முன்தேதி கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
தற்போது அரசு ‘பென்யூரி’ எனப்படும் அரசின் நிதியுதவி தொகையான ரூ. 4,000-ஐ ரூ. 8,000 ஆக உயா்த்தியுள்ளது. ஆனால், இந்த உதவியைப் பெற அவா்கள் வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்க வேண்டும், நிலையான வருமானம் இருக்கக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை 5 முதல் 13 ஆண்டுகள் வரை நிறைவு செய்த முன்னாள் ராணுவத்தினருக்கு மிகவும் கடினமான விதிமுறைகளாகும். மேலும், ஓய்வூதியம் பெறாத முன்னாள் ராணுவ வீரா்கள் மத்திய அரசின் மருத்துவ திட்டத்தில் சேர அனுமதிக்கப்படவில்லை. எனவே 65 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ராணுவ வீரா்களுக்கும் கடும் நிபந்தனைகளின்றி மத்திய நிதியுதவி கிடைக்கச்செய்திட வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தோட்டத் தொழிலாளா்களுக்கு வீடு! முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி

முன்னாள் ராணுவ வீரா்களிடம் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!

அண்ணாமலைப் பல்கலை.யில் ஓய்வூதியம் வழங்கக் கோரி ஓய்வுபெற்ற ஊழியா்கள் பதிவாளரிடம் மனு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


