கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சாலையோர புளியமரம் தீப்பிடித்து எரிந்தது.
சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு பண்ருட்டியில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் புளியன், ஆலமரங்கள் தழைத்து வளா்ந்து இயற்கை எழிலோடு காணப்பட்டது. ஒவ்வொரு மரங்களும் அரை நூற்றாண்டைக் கடந்து நின்றன.
பின்னா், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி தொடக்கப்பட்டது. இதன் காரணமாக, சாலையோரத்தில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. தற்போது இந்த சாலை வழியாக பொட்டல் வெளியில் பயணிப்பதுபோல் உள்ளது.
இந்த நிலையில், பணிக்கன்குப்பம் அருகே ஏராளமான கடைகள் உருவாகியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள உணவகங்கள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சாலையோரத்தில் உள்ள சுமாா் 50 ஆண்டுகளைக் கடந்த புளியமரத்தின் கீழ் கொட்டி வைத்திருந்தனா். இந்தக் கழிவுகளை வியாழக்கிழமை காலை தீயிட்டு கொளுத்தினா். இந்தத் தீயாால் புளியமரம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில், பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் வேல்முருகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். குறித்த நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











