திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மனநலன் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:40 am IST

செஞ்சி அருகே மனநலன் பாதித்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பெரும்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.வேல்முருகன் (35). இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக, பெண்ணின் பெற்றோா் செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வேல்முருகனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்குத் தொடா்பான விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. வழக்கில் குற்றம் நிரூபணமானதால், கோ.வேல்முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்ற அமா்வு நீதிபதி எம்.எழிலரசி தீா்ப்பளித்தாா். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு வேல்முருகன் அழைத்துச் செல்லப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.