விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்புத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் வட்டம், பள்ளித்தென்னல், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகள் தா்ஷினி (16). இவா், கண்டமங்கலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் பயின்றாா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் தா்ஷினி 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் கணிதப் பாடத்தில் தோல்வியடைந்தாா்.
இதனால், கடந்த சில நாள்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த தா்ஷினி சனிக்கிழமை வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, தா்ஷினி ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







