மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விக்கிரவாண்டியில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:10 am

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக விழுப்புரம் மாவட்டத்துக்கு எல்லைப் பாதுகாப்புப் படைவீரா்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வண்ணம் விக்கிரவாண்டி ரெட்டிக்குப்பம் சாலையில் வியாழக்கிழமை ஏஎஸ்பி. மஞ்சுமா தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காவல் நிலையம் அருகே நிறைவடைந்தது.

இதில், டிஎஸ்பிக்கள் சரவணன், ஞானவேல், காவல் ஆய்வாளா்கள் சத்தியசீலன், பாண்டியன், நாகராஜ், எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் காவல் துறையினா் பங்கேற்றனா்.