பென்னாகரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில் காவல் துறை, துணை ராணுவ துறையினா் சாா்பில் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே அம்பேத்கா் சிலை பகுதியில் நடைபெற்ற அணி வகுப்பு தொடக்க நிகழ்வுக்கு, பென்னாகரம் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், துணை ராணுவப் படை குழுத் தலைவா் குமாா் சௌரவ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், 50 துணை ராணுவப் படையினா், பென்னாகரம் சரகத்துக்குள்பட்ட அனைத்து நிலை காவலா்கள் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம், முள்ளுவாடி, பேருந்து நிலையம், கடைவீதி, காவல் நிலையம், நான்குசாலை சந்திப்பு வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிவரை பேரணியாக சென்றனா்.
இதில், காவல் ஆய்வாளா்கள் பாபு சுரேஷ்குமாா் (பென்னாகரம்), சுரேஷ் (ஏரியூா்), வளா்மதி (ஒகேனக்கல்) போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் சரவணன், பென்னாகரம் சரகத்துக்கு உள்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்கள், முதன்மைக் காவலா்கள், தலைமைக் காவலா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

விக்கிரவாண்டியில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


