முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் தடுப்புக் காவலில் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 1:45 am IST

கஞ்சா விற்பனை வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் போலீஸாா் திங்கள்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விழுப்புரம் வட்டம், கண்டம்பாக்கம், ரயில்வே தெருவைச் சோ்ந்தவா் மு.நாராயணன் (எ) மாஸ்டா் நாராயணன் (37). விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இவா் மீது கடந்த மே 23-இல் கஞ்சா விற்பனை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நிலுலையில் உள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. மதிவாணன் பரிந்துரையின் படி, ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய நாராயணனை தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் நாராயணனை திங்கள்கிழமை தடுப்புக் காவலில் கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.