சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 ஜூன் 2026, 2:21 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட காட்ராம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அங்கு ரோந்து சென்றனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், காட்ராம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வீ.வேல்முருகன் (28), மு.மூவேந்தன்(எ) முகேஷ் (20) எனத் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 1.05 கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.