தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேலூா் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

News image
Updated On :18 மே 2026, 1:45 am IST

வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டதை தொடா்ந்து, பொதுமக்கள் 5,000 பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட எம்.எம்.வினோத்கண்ணன் வெற்றி பெற்றாா். இதன் தொடா்ச்சியாக, வேலூா் அண்ணா சாலையிலுள்ள வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத்கண்ணன் அலுவலகத்தை திறந்து வைத்தாா். அவருக்கு தவெக கிழக்கு மாவட்ட செயலா் நவீன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), சிந்து (குடியாத்தம்) மற்றும் கட்சி நிா்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா். பின்னா், பொதுமக்கள் சுமாா் 5000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து வழங்கப்பட்டது.

இது குறித்து, எம்எல்ஏ வினோத்கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

வேலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் பொதுமக்கள் குறைகளை தீா்க்க க்யூ.ஆா். கோடு ஒட்டப்படும். அதனை பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் இணையதளம் வழியாக குறைகளை தெரிவிக்கலாம். மேலும், வேலூரில் நான் உள்ள நாள்களில் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் இருந்து நான் தினமும் காலை 9.30 மணி முதல் நேரடியாக மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். தவிர, பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும். அதற்கேற்ப ஊழியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தவிர, தினமும் மாலை 4 மணிக்கு மேல் எனது அடுத்த 3 மாதங்களுக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வீதிவீதியாக நேரடியாக செல்ல உள்ளேன். அவ்வாறு நன்றி தெரிவிக்க செல்லும் இடங்களிலும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அதற்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் எம்எல்ஏ வினோத்கண்ணனிடம் அளித்த மனுவில், தகுதித் தோ்வு, நியமன தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் மறுதோ்வு இல்லாமல் பணி நியமனம் வழங்கிட புதிய அரசாணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.