இறைச்சிக்காக ஏலம் போகும் கோயில் மாடுகள்!
தருமபுரி, ஆக.27: நேர்த்திக்கடனுக்காக கோயில்களுக்கு தானமாக அளிக்கப்படும் மாடுகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இறைச்சிக்காக ஏலம்விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோயில் மாடுகளை ஏலம் விட்டு, ஏலத் தொ


தருமபுரி, ஆக.27: நேர்த்திக்கடனுக்காக கோயில்களுக்கு தானமாக அளிக்கப்படும் மாடுகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இறைச்சிக்காக ஏலம்விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோயில் மாடுகளை ஏலம் விட்டு, ஏலத் தொகையை கோயில் கணக்கில் சேர்ப்பது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், அவற்றை ஏலம் விடக்கூடாது, கோசாலைகளுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு 12.3.2001-ல் ஆணை பிறப்பித்தது.
இந்த விதிமுறை பல்வேறு கோயில்களில் கடைப்பிடிப்பதில்லை. அரசு உத்தரவிட்டிருந்தாலும் சில மாவட்டங்களில் கோசாலைகள் இல்லாததால் கோயில் மாடுகள் இறைச்சிக்காக ஏலம் விடப்பட்டு கேரளத்துக்கு கொண்டுசெல்லப்படுகின்றனவாம். சிலர் இவற்றை பிடித்துக்கொண்டுபோய் சந்தையில் விற்றுவிடுகின்றனராம்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டத்தில் கோசாலைகள் இல்லை. இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாடுகள் ஈரோடு, பன்னாரி பகுதி கோசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறையின் கீழ் 1,930 கோயில்கள் உள்ளன. இதில் 20 சதவீத கோயில்களில் மட்டுமே செயல் அலுவலர்கள் உள்ளனர். மீதமுள்ள கோயில்கள் அந்தந்த கோயில் டிரஸ்டிகள் மூலம் நடத்தப்படுகின்றன.
இக்கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் மாடுகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கோயில் பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு, பின்னர் அவை உணவுக்காக திறந்துவிடப்படுகின்றன. ஆனால் அவை கண்காணிக்கப்படுவதில்லை.
இது குறித்து தருமபுரி மாவட்ட இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜி. ரமேஷ் கூறியது:
மாடுகளை கண்காணிக்க, வட்டம் தோறும் நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எனவே மாவட்டம் தோறும் கோசாலைகளை அமைத்து, உரிய முறையில் கோயில் மாடுகளை பராமரிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...