ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வீணாகும் தார் டிரம்களிலிருந்து தயாராகும் வாணலிகள்!

கிருஷ்ணகிரி, ஆக. 3: வீணாகும் தார் டிரம்களிலிருந்து வாணலிகள் தயாரிக்கப்படுகின்றன. விவசாயம், கட்டடப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த வாணலிகள் தயாரிப்பு, குடிசைத் தொழிலாகவே நடைபெறுகிறது.  சாகுபடியான

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:58 pm

எஸ்.கே ரவி

கிருஷ்ணகிரி, ஆக. 3: வீணாகும் தார் டிரம்களிலிருந்து வாணலிகள் தயாரிக்கப்படுகின்றன. விவசாயம், கட்டடப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த வாணலிகள் தயாரிப்பு, குடிசைத் தொழிலாகவே நடைபெறுகிறது.

 சாகுபடியான பயிர்கள் பராமரித்தல், மணல், மண், உரங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்ல விவசாயிகளுக்கும், மண் மற்றும் சிமென்ட் கலவைகளை எடுத்து செல்ல கட்டடப் பணியாளர்களுக்கும் வாணலிகள் பயன்படுகின்றன.

 இவை கிருஷ்ணகிரி, மத்தூர், ஒசூர் உள்ளிட்ட இடங்களில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. இப்பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

வாணலி தயாரிப்பு முறை:

 வீணாகும் தார் டிரம் ஒன்றை ரூ.100-க்கு வாங்குகின்றனர். டிரம்களை சூடாக்கி,  தார்களை நீக்குகின்றனர். பின்னர் அதை வெட்டி தகடுகளாக்கி, தேவையான அளவுகளில் வட்டமாக வெட்டுகின்றனர்.

 வெட்டப்பட்ட துண்டுகள் சுத்தியால் வாணலியாக வடிவமைக்கப்படுகிறது. பின்னர் கம்பி கட்டப்படும். ஒரு வாணலி தயாரிக்க ரூ.45 வரை செலவாகிறது.

 இதனை தயாரிக்க மின்சாரம் தேவையில்லை. குடிசைத் தொழிலாகவே விளங்கி வருகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வாணலிகளை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

 "புதிய தகடுகள் கிலோ விலை கிலோ ரூ.36-க்கு விற்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி வாணலிகள் தயாரித்தால் நூறு ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்க வேண்டும். எனவே, வீணாகும் தார் டிரம்களை பயன்படுத்தி வாணலி தயாரிக்கப்படுகிறது' என்கின்றனர் வாணலி தயாரிப்பாளர்கள்.

உற்பத்தி செலவைவிட குறைந்த விலைக்கு விற்பனை?

 ஒரு வாணலி தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.45 ஆகிறது. ஆனாலும், ரூ.44-க்கு இவற்றை விற்பனை செய்கின்றனர். தகடுகளில் வெட்டிய பிறகு கிடைக்கும் துண்டு கழிவுகளே இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு வருமானம். இந்த கழிவுகள் கிலோ ரூ.14 வரை விலைபோகின்றன.

100 நாள் வேலைத் திட்டத்தால் தேவை அதிகரிப்பு!

 இதுகுறித்து கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்த வாணலி தயாரிப்பாளர் சையத்கரீம் (54) கூறியது:

 தற்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதனால், வாணலிக்கு தேவை அதிகரித்துள்ளது. வாரம் ஆயிரம் வாணலிகள் தயாரித்தாலும், விற்பனையாகி விடுகிறது.

 பிளாஸ்டி வாணலிகள் உபயோகத்தில் இருந்தாலும், நீண்ட காலம் உழைப்பதால் தகடு வாணலியே அதிக அளவில் விற்பனையாகிறது.

 குறைந்த முதலீட்டில் இத்தொழிலில் வருவாய் ஈட்ட நினைக்கு தொழில் முனைவோர் வாணலி தயாரிப்புப் பணியில் ஈடுபடலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.