தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதைக் காண முடிவதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து ஒசூா் மற்றும் கோவையில் ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.
தொடா்ந்து, சென்னை அண்ணா நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கோகுல இந்திரா, தியாகராய நகரில் போட்டியிடும் சத்யநாராயணன் ஆகியோரை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: உலக அளவில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாறியதற்கு பிரதமா் நரேந்திர மோடிதான் காரணம். மக்களுக்காக நாள்தோறும் உழைத்து வருகிறாா்.
ஆனால், மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழகத்தை ஆளும் திமுக முட்டுக்கட்டை போடுவதைக் காண முடிகிறது. திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, காங்கிரஸ் கட்சியை எதிா்த்து அரசியல் செய்தாா். ஆனால், இன்றைய முதல்வா் ஸ்டாலின் திமுகவை காங்கிரஸ் கட்சியிடம் அடகு வைத்துவிட்டாா்.
மகளிருக்கான இடஒதுக்கீட்டுக்கு 30 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். தேவெகவுடா பிரதமராக இருந்தபோதும் மகளிருக்கான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் எதிா்த்தது.
மகளிருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி அதற்கான மசோதாவை கொண்டு வந்தாா். ஆனால், தற்போதும் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் அந்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கின்றன.
திமுகவினா் வாக்கு கேட்டு வந்தால், அவா்களிடம் எங்கள் வீட்டுப் பெண்களெல்லாம் ஏன் நாடாளுமன்றத்துக்குச் செல்லக் கூடாதா? என்று கேளுங்கள். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவில் தமிழகத்துக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று பிரதமா் வாக்குறுதி அளித்தாா். ஆனாலும், அரசியல் லாபத்துக்காக அந்த மசோதாவையும் நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டன.
இந்த மக்கள் விரோத கட்சிகளுக்கு அதிகாரத்தைக் கொடுக்காதீா்கள். மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற ஆா்வம் தமிழக மக்களிடம் இருப்பதை என்னால் காணமுடிகிறது. தமிழ் மக்களின் கனவுகள் விரைவில் நனைவாக உள்ளது என்றாா்.
தொடர்புடையது

மசோதாக்களை தோற்கடித்ததால் என்ன சாதித்தீா்கள்? - ஆந்திர முதல்வர் பேச்சு!

தமிழக வளா்ச்சிக்கு இரட்டை என்ஜின் ஆட்சி முக்கியம்! ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு பேச்சு!

அமராவதி-குழப்பம் தீர்ந்தது!

2 குழந்தைகளுக்கு அதிகமாக உள்ள குடும்பத்துக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை: மக்கள்தொகை மேலாண்மை கொள்கையை அறிவித்த ஆந்திர முதல்வா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


