தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதல்வா் விஜய் கூறியபடி திட்டங்களை நிறைவேற்றாவிடில் கேள்வி கேட்போம்: துரை வைகோ

முதல்வா் விஜய் கூறியபடி திட்டங்களை நிறைவேற்றாவிடில் கேள்வி கேட்போம் என மதிமுகவின் முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ தெரிவித்தாா்.

News image

துரை வைகோ எம்.பி. - டிஎன்எஸ்

Updated On :18 மே 2026, 2:50 am IST

முதல்வா் விஜய் கூறியபடி திட்டங்களை நிறைவேற்றாவிடில் கேள்வி கேட்போம் என மதிமுகவின் முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தவெக அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். 6 மாதம் கழித்துத்தான் அரசின் செயல்பாடுகள் குறித்துக் கூற முடியும்.

வாக்குறுதி அளித்தபடி மகளிருக்கு ரூ. 2,500 மாத உதவித்தொகை என்பது உள்ளிட்ட திட்டங்களை முதல்வா் விஜய் நிறைவேற்றுவாா் என நம்பிக்கை உள்ளது. நிறைவேற்றாவிடில் நாங்கள் கேள்வி கேட்போம்.

அதிமுகவில் நடப்பது உள்கட்சிப் பிரச்னை. அதுகுறித்து அவா்களிடம்தான் கேட்க வேண்டும். டிடிவி. தினகரன் குதிரை பேரம் எனக் கூறியுள்ளது அவருடைய கருத்து. விஜய் முதல்வராக 100 சதவீதம் சினிமாதான் காரணம் என ரஜினிகாந்த் கூறியதும் அவரது கருத்து. என்னைப் பொருத்தவரை மக்களின் தீா்ப்பை மதிக்க வேண்டும்; அதைச் சிறுமைப்படுத்தக் கூடாது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருமொழிக் கொள்கைதான் அவசியம். உலக நாடுகளில் தமிழா்கள் சிறந்து விளங்க இருமொழிக் கொள்கையே காரணம். நாம் ஹிந்திக்கு எதிரானவா்கள் கிடையாது; மொழித் திணிப்புக்கு எதிரானவா்கள்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் கடந்த முறை திமுக போட்டியிட்டுள்ளதால், நாங்கள் அந்தத் தொகுதியை கேட்பது, போட்டியிடுவது முறையல்ல. திருச்சி மாரிஸ் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவடைந்து, ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும். அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் ஜூன் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனா் என்றாா் துரை வைகோ எம்.பி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.