முதல்வர் சி. ஜோசப் விஜய்யை மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ இன்று (ஜூன் 4) சந்தித்துப் பேசினார்.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், திருச்சியில் மெட்ரோ ரயில் சேவையை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சென்று சந்தித்தார். அந்தவகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரின் இல்லத்திற்குச் சென்று முதல்வர் விஜய் சந்தித்தார். உடன் அவரின் மகன் துரை வைகோவை சந்தித்துப் பேசினார்.
அதுமுதல் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவாக துரை வைகோ தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், ஒரு கட்சி மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என இன்று தெரிவித்திருந்தார்.
முதல்வராக விஜய் பொறுப்பேற்று 3 வாரங்கள் மட்டுமே சென்றுள்ளதாகவும், குறைகளை சரிசெய்ய அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் முதல்வர் விஜய்யை துரை வைகோ இன்று இரவு சந்தித்தார். இந்த சந்திப்பில், திருச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக புதிய தொழில் முதலீடுகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சிக்கு மெட்ரோ சேவையை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.
Summary
MDMK Durai Vaiko Meets Chief Minister Vijay in neelangarai home chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










