தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசுப் பேருந்து மோதி தஞ்சை ஆசிரியா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 8:29 pm

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், மருதக்குடி பகுதியை சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (39). இவா் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இவா் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சியில் உள்ள தனது உறவினரை பாா்த்து விட்டு, புதுக்கோட்டை - திருச்சி சாலை ஜெயில் காா்னா் பகுதியில் வந்து கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்று, அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், படுகாயம் அடைந்த ரஞ்சித் குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.