திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் கோடைத்திருநாள் விழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த நம்பெருமாள் கோடைத்திருநாள் விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த கோடைத்திருநாளின் நிறைவு நாளான வியாழக்கிழமை கோடை மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

Updated On :1 மே 2026, 2:53 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த நம்பெருமாள் கோடைத்திருநாள் விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் சித்திரை மாதத்தில் பூச்சாற்று உற்ஸவம் எனும் கோடைத்திருநாள் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டில் இந்த விழா ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி ஏப். 30-ஆம் தேதி நிறைவடைந்தது. கோடைத்திருநாள் விழாவில் வெளிக்கோடை 5 நாள்களும், உள்கோடை 5 நாள்களும் நடைபெற்றது.

வெளிக்கோடை திருநாள் 25-ஆம் தேதி நிறைவடைந்ததை தொடா்ந்து, உள்கோடை திருநாள் விழா 26-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.

விழாவில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மணல் வெளியில் உள்ள கோடை மண்டபத்தில் எழுந்தருளி பூச்சாற்று உற்ஸவம் கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

நிறைவு நாளையொட்டி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு மணல் வெளியில் உள்ள உள்கோடை மண்டபத்தில் எழுந்தருளினாா். பின்னா் பல வண்ண பூக்களால் தொடுக்கப்பட்ட பூவை நம்பெருமாள் மீது சாத்தப்பட்டது. இதை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து இரவு 9 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். இத்துடன் கோடைத்திருநாள் நிறைவடைந்தது.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.